தமிழக வாக்காளர் பட்டியல் ஹிந்தி மொழியில் வெளியீடு !

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பேர் சேர்க்கும் பணிகள் நடந்து முடிந்தன.இந்த தேர்தலில் புதிய வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டன.இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் ஹிந்தி மொழியில் இருப்பதால் மக்கள் குழப்பம் அடைத்துள்ளனர் .

கடந்த 20 ஆம் தேதி தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.ஆத்தூர்,நிலக்கோட்டை போன்ற தொகுதிகளில் இருக்கும் வாக்காளர் சில பெயர்கள் ஹிந்தியில் இருந்தது.

மேலும் இறந்தவர்களுடைய பெயர்களும் நீக்க படாமல் இருந்தது.வாக்காளர் பட்டியல் ஹிந்தி,தமிழ்,ஆங்கிலம் கலந்து இருப்பதால் ஆட்சியரிடம் புகார் தெரிவிக்க பட்டுள்ளது.