ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நாவல்பழத்தின் நன்மைகள் !

நாவல் பழத்தில் கால்சியம் ,இரும்புசத்து மற்றும் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.இது நம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது.இந்த பழத்தை உண்பதால் நமக்கு நிறைய நன்மைகள் உள்ளன.

நாவல்பழத்தில் வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.மேலும் இதில் கால்சியம் ,இரும்புசத்து போன்ற உடலுக்கு தேவையான நன்மைகள் உள்ளது.இதை நாம் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை கிடைத்து எலும்பு பலமாக இருக்கும்.

நாவல் பழம் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாட்டை குணமாக்கும் ஒரு சிறந்த பழம்.இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது.

நாவல் பழத்தில் இருக்கும் அதிக இரும்புச்சத்தால் நம் உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது.இதில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது.