உங்கள் சருமம் வறட்சியாக உள்ளதா..இதோ சில டிப்ஸ் !

வறண்ட சருமம் பார்க்க வறண்டும் பொலிவு இழந்தும் காணப்படும்.ஏன் என்றால் இந்த வகை சருமம் துவாரங்கள் தேவையான அளவு எண்ணெய் சுரப்பது இல்லை.மேலும் வறண்ட சருமம் உடையவர்களுக்கு சரும சுருக்கம் மிக விரைவில் வந்துவிடும்.இந்த வகை சருமத்திற்கு அதிக கவனம் தேவை.

முதலில் வறண்ட சருமம் உடையவர்கள் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கொண்டும் ஒரு 15 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் சருமத்தில் சுருக்கங்கள் வராது.

சிறிதளவு பாலேட்டில் மற்றும் அதனுடன் ஒரு கரண்டி தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து மிதமான நீரில் முகம் கழுவ வேண்டும்.இப்படி செய்வதன் மூலம் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.

முட்டை கோஸ் சாறு சிறிதளவு ,ஈஸ்ட் ,தேன் இவைகளை சமஅளவில் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள வறட்சி நீங்கும்.