வெளியானது ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் !

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஜேம்ஸ் காஸ்மோ நடித்துள்ள ஜகமே தந்திரம் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷுக்கு ஒரு மாஸ் ஆன படமாக இருக்கும் என்று தோன்றுகிறது.அசுரன்,கர்ணன் படங்களை தொடர்ந்து இந்த படம் மூலம் தனது ரசிகர்களை தன் வசம் கட்டிவைப்பார் என்று தெரிகிறது.

மேலும் இது ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் வரும் ஜூன் 18ம் தேதி ஜகமே தந்திரம் வெளியாகிறது.இந்த டிரைலரையும் சந்தோஷ் நாராயணன் தான் வெளியிட்டுள்ளார்.தனுஷ் ரசிகர்கள் படத்தை தியேட்டரில் பார்க்கமுடியவில்லை என்று வருந்துகிறார்கள்.