இந்தியாவில் உருமாறிய கரோனாவுக்கு டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது !

இந்தியாவில் மீண்டும் 3 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு
தஞ்சையில் கொரோனாவுக்கு இளம்பெண் உயிரிழப்பு

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 கரோனா வகை டெல்டா கரோனா வகை என அழைக்கப்படும் என உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தில் கரோனா தொற்று கடந்த ஆண்டு பரவ தொடங்கியது.இந்த வைரஸ் தொற்றால் பல பேர் உயிரிழந்தனர்.மேலும் பல்வேறு பகுதிகளில் இந்த கரோனா வைரஸ் உருமாறியது.உருமாறிய கொரோனா வகைகள் வைரஸ் பாதிப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வகை B.1.1.7 என்று கூறுகிறார்கள்.தென் ஆப்பிரிக்கா கண்டறியப்பட்ட கரோனா வகை B.1.351 என்றும் கூறுகிறார்கள்.

மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகை டெல்டா என்று அழைக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.