தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் !

தனுஷ் 2018ல் வெளிவந்த The Extraordinary Journey of the Fakir படத்தின் மூலம் ஹாலிவுட்டிற்கு அறிமுகமானவர்.அவெஞ்சர்ஸ்’, ‘கேப்டன் அமெரிக்கா’ படங்களை இயக்கிய ரஸ்ஸோ சகோதரர்களின் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.The Gray Man எனப் பெயரிடப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டில் அமெரிக்க நாவலாசிரியரான மார்க் க்ரானி எழுதி வெளிவந்த The Gray Man நாவலே, இப்போது அதே பெயரில் படமாகவுள்ளது.நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருக்கும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.