கர்நாடகாவில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது !

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் 3 ம் அலை 6 முதல் 8 வாரங்களில் வரும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது.இந்த வகையான வைரஸ் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளாவில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம் மைசூரு மற்றும் பெங்களூருவிலும் தலா ஒருவருக்கு கொரோனா டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் , தமிழகத்திலும் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெல்டா பிளஸ் கரோனா பாதித்த சென்னை பெண் குணமடைந்துவிட்டார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.