கொரோனா தடுப்பூசி விரைவில் குழந்தைகளுக்கு !

Booster vaccine
இன்று முதல் செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசி

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை அதிகம் தாக்கியது.இதனை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.இந்நிலையில் 3 ம் அலை வரும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கொரோனா மூன்றாவது அலை உருவானால் அது குழந்தைகளை அதிகளவில் தாக்கலாம் என கூறப்படும் நிலையில், குழந்தைகள் நலன் மீது அதீத அக்கறை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரஞ்சித் குலேரியா, வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து 2 முதல் 17 வயது வரை சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி, 2ம் மற்றும் 3ம் கட்ட பரிசோதனை நடத்த கடந்த மே 12 ஆம் தேதி அனுமதி அளித்திருந்தது.

3வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை முடிவடைந்தால் செம்படம்பர் முதல் குழந்தைகளுக்கு செலுத்த அனுமதி கிடைக்கும் என்று தெரிவித்தார்.