வடவள்ளி சந்திரசேகர் மீது கொலை மிரட்டல் வழக்கு

அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி தூண்டுதலின் பேரில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை வெட்டி கொலை செய்து பிரியாணி போடப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாகவும்,எனவே அமைச்சர்எஸ்.பி. வேலுமணி மீதும் வடவள்ளி சந்திரசேகர் உட்பட அவரது ஆட்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து திமுக வழக்கறிஞர்கள் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வடவள்ளி காவல் துறையினர் காவல்துறையினர் அதிமுக பிரமுகர் சந்திரசேகர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

கொலை மிரட்டல் மற்றும் தகாத வார்த்தையில் கட்டுதல் ஆகிய இரு பிரிவுகளில் காவல்துறையினர் வடவள்ளி சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மிக நெருக்கமான வடவள்ளி சந்திரசேகர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இருப்பது கோவை மாவட்ட அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமாக இருப்பதுடன் மாநகராட்சியில் முக்கிய டெண்டர்கள் சந்திரசேகர் எடுத்து வருவதாக தொடர்ந்து பலவேறு புகார்கள் சந்திரசேகர் மீது வெளியாகி வந்த்து.

மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக நாகராஜன் பொறுப்பேற்ற நிலையில் புகார்கள் மீது நடவடிக்கைகள் வேகமெடுத்து வருவது குறிப்பிடதக்கது.