மக்களுக்கு ஒரு எச்சரிக்கை..வங்கக்கடலில் உருவாகிறது குலாப் புயல் !

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.மேலும் இது புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு குலாப் என்று பெயர் வைக்கப்படுகிறது. வடமேற்கு திசையை நோக்கி நகரும் குலாப் புயல் ஒடிசா – வடக்கு ஆந்திரா இடையே 26ம் தேதி மாலை கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.

இன்றைய தினம் ஒடிஸா கடலோரம், மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஆந்திராவின் கடலோரங்களில் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசும்.

மேலும் விசாகப்பட்டினம்- கோபால்பூர் பகுதியில் கரையை கடக்கிறது. கரையை கடக்கும் போது மணிக்கு 75 கி.மீ. வேகத்திற்கு மேல் காற்று வீசும்.எனவே வங்கக் கடல், அந்தமான் கடலின் மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இடங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சென்னையில் பயங்கரம்.. கழுத்தை அறுத்துக் கொலை !