மீண்டும் கடுமையான சட்டங்கள்..பீதியில் ஆப்கான் மக்கள் !

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் முதலில் ஆட்சியில் இருந்து போது கடைப்பிடிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இனி இருக்காது என்று தெரிவித்தனர்.

ஆனால் தற்போது கடுமையான சட்டங்கள் அமலுக்கு வரும் நிலையில் உள்ளது என்று தெரியவந்துள்ளது.பொதுமக்கள் தவறு செய்தல் கை கால்களை துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும் என தலிபான் தலைவர் முல்லா நூருதீன் துராபி தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் ஆப்கான் ஆட்சியை பிடித்த போது பழைய சட்டங்கள் இருக்காது போன்று தெரிவித்தனர்.தற்போது நாங்கள் யாருடைய சட்டங்களையும் கேட்டதில்லையே. எங்கள் சட்டம் எப்ப்டியிருக்க வேண்டும் என்று எங்களுக்கு யாரும் சொல்லித்தரத் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.

மேலும் தங்கள் இஸ்லாம் சட்டங்களுக்கு உட்பட்டு தண்டனைகள் வழங்குவதாகவும் கைகளைத் துண்டிப்பதால் அந்த நபர் அதே குற்றத்தை மீண்டும் செய்ய மாட்டார் என்று கருது தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : மக்களுக்கு ஒரு எச்சரிக்கை..வங்கக்கடலில் உருவாகிறது குலாப் புயல் !