கியாஸ் சிலிண்டர் விலை ரூ.10 குறைந்தது

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.10 குறைந்திருக்கிறது. இந்த விலை குறைப்பு இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை (மானியம் மற்றும் சந்தை விலை பயனாளர்களுக்கு) ரூ.819-ல் இருந்து ரூ.809 ஆக குறைந்துள்ளது.

இதைப்போல பிற நகரங்களிலும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.10 குறைக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்களுக்கு சற்றே ஆறுதலை அளித்திருக்கிறது.