பப்ஜி மதனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் !

யூடியூபில் பப்ஜி விளையாட்டை நேரலையாக ஒளிபரப்பி, ஆபாசமாக பேசினார் என்ற காரணத்திற்காக பப்ஜி மதனை கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

அவரது மனைவியும் இதற்கு உடந்தை என்று போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.மேலும் அவர்களது வங்கிக் கணக்குகளும் பப்ஜி மதனின் யூ-டியூப், இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டன.

இந்த நிலையில் பப்ஜி மதன் மற்றும் அவரின் மனைவிக்கு எதிராக 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையைமத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

மதன் மற்றும் அவரது மனைவிக்கு மனைவிக்கு எதிராக 32 புகார்கள் மற்றும் 32 சாட்சியங்கள் குற்றபத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. மதன் 2 ஆயிரத்து 848 பேரிடம் கொரோனா உதவி செய்வதாகக் கூறி 2.89 கோடி ரூபாய் பெற்று செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.