நடிகர் காளிதாஸ் காலமானார் !

நடிகர் மற்றும் டப்பிங் கலைஞருமான காளிதாஸ் காலமானார். அவருக்கு வயது 65.இந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் திரை பிரபலங்கள் நிறைய பேர் இறந்துள்ளார்.

1980-களில் வெளிவந்த பல படங்களின் வில்லன் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்தவர் காளிதாஸ்.சுமார் 3000 படங்களுக்கும் மேலாக டப்பிங் பேசியுள்ளார்.படங்கள் மற்றும் சின்னத்திரையிலும் பலவற்றில் நடித்துள்ளார்.

தற்போது உடல்நிலை குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.இவருக்கு ரசிகர்கள் மாற்று திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.