தமிழகத்தின் 2021-22 ஆண்டிற்கான பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
முதல்முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட் வெளியிடப்படுவதால், அனைவருக்கும் மேஜை கணினி வழங்கப்பட்டுள்ளன.பட்ஜெட்டுக்கு முன்பாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்த பிடிஆர்.
வேளாண் துறைக்கான தனி பட்ஜெட், 14ம் தேதி(நாளை) தாக்கல் செய்யப்படுகிறது.கலைவாணர் அரங்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



