மறைந்த கணவரின் நினைவாக மனைவி ஒருவர் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வரும் சம்பவம் ஆந்திராவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4 வருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் சிக்கி இந்த பெண்ணின் கணவன் உயிரிழந்துள்ளார். கணவர் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் பத்மாவதி தினமும் தவித்து வந்துள்ளார். பத்மாவதியின் கனவில் அவரது கணவர் அங்கிரெட்டி தனக்கு கோவில் கட்டும்படி சொன்னதால் இந்த கோவிலை கட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கோவிலில் தனது கணவரின் பலிங்கு உருவ சிலையும் அவர் நிறுவி உள்ளார்.



