பிசிசிஐ வீரர்களின் ஒப்பந்தப் பட்டியல் அறிவிப்பு !

இந்திய கிரிக்கெட் வாரியம் நடப்பு 2021ம் ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூவர் மட்டும் ஏ+ கிரேடு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

ஏ+ பிரிவில் இடம்பெறும் வீரர்கள் ரூ.7 கோடியும், ஏ பிரிவில் இடம்பெறும் வீரர்கள் 5 கோடி ரூபாயும், பி பிரிவில் இடம்பெறும் வீரர்கள் 3 கோடி ரூபாயும்  சி பிரிவில் இடம்பெறும் வீரர்கள் ஒரு கோடி ரூபாயும் ஊதியமாக பெறுவார்கள்.

இந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒப்பந்தப் பட்டியலில் இருந்து மனிஷ் பாண்டே மற்றும், கேதர் ஜாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.