கைகளை ‘சானிடைசரால்’ சுத்தம் செய்த பின்னர் பட்டாசு வெடிக்கக்கூடாது!!!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ரமா தேவி நேற்று தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையின் போது எதிர்பாராத விதமாக ஏற்படும் தீக்காயங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க 10 படுக்கை வசதி கொண்ட தீபாவளி சிறப்பு வார்டு தயாராக உள்ளது.

மேலும் இங்கு தயார் நிலையில் உள்ள 22 டாக்டர்கள் மற்றும் 25 ஊழியர்கள், சுழற்சி முறையில் பணியில் இருந்து தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பர். தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறபோதிலும் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் பொதுமக்கள் முககவசம் அணிந்து பட்டாசு வெடிக்கவேண்டும்