திரையரங்குகளிலும் வெளியாகும் ‘மாஸ்டர்’ டீஸர்

‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டீஸர் தீபாவளி முதல் திரையரங்குகளிலும் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர்’ படத்தின் டீஸர் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், திரையரங்குகள் திறக்கப்பட்டு இருப்பதால் தீபாவளிப் பரிசாக, இந்த டீஸர் திரையரங்குகளிலும் திரையிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

மாலை 6 மணிக்கு சன் டிவியின் யூடியூப் தளத்திலும், 6.30 மணி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி திரையரங்குகளிலும் டீஸர் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘மாஸ்டர்’ வெளியாகும் எனத் தெரிகிறது.