கோவேக்சின் தடுப்பூசி விலை நிர்ணயம் !

இந்தியாவில் கரோனா வைரஸின் 2ஆவது அலை மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.

கோவேக்சின் தடுப்பூசிக்கான விலையை அதன் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிர்ணயம் செய்துள்ளது. அரசு மருத்துவமனைக்கு ஒரு டோஸ் ரூ.600, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான விலை 15 முதல் 20 டாலர் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு கோவேக்சின் மருந்து ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அந்த மருந்தை மத்திய அரசு மக்களுக்கு இலவசமாக வழங்குகிறது.