ஆக்ஸிஜன் வழங்கக்கோரி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் !

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.தமிழக அரசு பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இந்தநிலையில், தமிழகத்துக்கு வழங்கும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளது,விரைவில் தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவையில் அளவு 450 மெட்ரிக் டன்னை எட்டும் என்று தெரிகிறது. இது எங்களுடைய உற்பத்தி திறனான 400 மெட்ரிக் டன்னை விட அதிகம்.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது கூட 58,000 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தனர்.

ஆனால், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. எனவே, மேலே குறிப்பிட்டதைவிட ஆக்ஸிஜனின் தேவை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.