தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் !

Tn news: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனர்
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனர்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்மாவட்ட கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று முதல் 28ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 90 சதவீதம் வரை உள்ளதால் காற்றின் வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக உணரப்படும் என்று தெரிவித்துள்ளார்.