நாளை முதல் வங்கிகள் அரை நாள் மட்டுமே இயங்கும் !

கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகின்ற நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மத்திய அரசும், மாநில அரசும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து நாளை முதல் தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக நாளை முதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அரை நாள் மட்டுமே இயங்கும் என கூறப்பட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆதார் பதிவு மற்றும் திருத்தப் பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.