கொரோனா தடுப்பு பொது சந்தையில் கிடைக்காது- மத்திய சுகாதாரத் துறை செயலாளர்

கொரோனா தடுப்பு மருந்து உடனடியாக பொது சந்தையில் கிடைக்காது என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது: தடுப்பூசி எப்போது பொது சந்தையில் கிடைக்கும் என்று இப்போது கூறமுடியாது. அடுத்த 7 முதல் 9 மாதங்களுக்கு முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவில் அவசர தேவைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு நம் நாட்டிலோ, வெளி நாட்டிலோ சந்தை அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அனைத்து ஆய்வக பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்ட பின்னரே பொது சந்தையில் தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.