கிராமங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த இறங்கிய புதுவை அரசு !

இந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கரோனாவில் இருந்து நம்மை காத்து கொள்ள தடுப்பூசி எடுத்துக்கொள்ளுவதே சிறந்த வழி என்று அரசு மக்களுக்கு அறிவுறுத்துகிறது.புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,137 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவையில் இன்று முதல் கிராமம் தோறும் கரோனா தடுப்பூசி போடப்படும் என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.கரோனா இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் இது நடைபெறுகிறது.

எனவே இன்று முதல் கிராமம் தோறும் தடுப்பூசி போடப்படும் என்றும், ஒவ்வொரு கிராமமாக தேர்வு செய்து தடுப்பூசி அளிக்கப்படும் எனவும் அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.