தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பேசிய அவர் டெல்லியில் 3 மாதங்களுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது. இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.