நடிகை சுனைனாவிற்கு கரோனா தொற்று !

தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் அறிமுகமானவர்..பின்னர் இவர் மாசிலாமணி, வம்சம், சமர்,தெறி போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.

கரோனா தொற்று பிரபலங்கள்,அரசியல் தலைவர்கள் போன்றவர்களிடமும் அதிகம் பரவி வருகிறது.நடிகை சுனைனாவும் இப்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சுனைனா தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எச்சரிக்கையுடன் இருந்தும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். வீட்டின் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என் குடும்பத்தினர் தவிர வேறு யாருடன் தொடர்பு கொள்ள வில்லை என்பதால் அவர்களும் தனிமையில் உள்ளனர்.

அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். உயிரை காப்பாற்றுங்கள். அனைவருக்கும் என் பிரார்த்தனை எனக் குறிப்பிட்டுள்ளார்.