கரோனா நிவாரணமாக இந்தியாவுக்கு 15 மில்லியன் டாலர் நிதிஉதவி அளித்த ட்விட்டர் நிறுவனம் !

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்கி வருகிறது.பாதிப்பு எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு 30 ஆயிரத்தை தொட்டது.மக்களை பாதுகாக்க கரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் இந்தியாவுக்கு கரோனா நிவாரண நிதியாக 15 மில்லியன் டாலர் நன்கொடையாக அளித்துள்ளது.

இது தொடர்பாக டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் பேட்ரிக் டோர்சி கூறுகையில், இந்த தொகையானது கேர், எய்ட் இந்தியா மற்றும் சேவா இன்டர்நேஷனல் யுஎஸ்ஏ ஆகிய மூன்று அரசு சாரா நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.