90 சதவீத ஆவணங்களை சமர்ப்பித்து விட்டோம்- பாரத் பயோடெக்

உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் இடம் பெறுவதற்கு கோவேக்சின் சார்பில் அனுப்பப்பட்ட விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது.

கோவேக்சின் தடுப்பூசி இடம்பிடிப்பதற்கு 90 சதவீத ஆவணங்களை சமர்ப்பித்து விட்டதாக மத்திய அரசிடம் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியது.

எஞ்சிய ஆவணங்களை இந்த மாதத்திற்குள் உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பிப்பதாகவும் மத்திய அரசிடம் பாரத் பயோடெக் கூறி உள்ளது. உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாடு பட்டியலில் கோவேக்சின் இடம் பிடித்துவிட்டால் அது ஒரு சர்வதேச அங்கீகாரம் ஆகும்.