இந்த ஆண்டும் கல்வி தொலைக்காட்சி மூலமே வகுப்புகள்..!

tn-news-schools-and-colleges-holiday-in-kanyakumari
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்த கல்வி ஆண்டுக்கான (2021-22) வகுப்புகள் ஆன்லைன் மூலமே தொடங்கப்பட அதிக வாய்ப்புள்ளது. சில தனியார் பள்ளிகளில் ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அரசு பள்ளி மாணவர்களை பொறுத்தவரை கடந்த கல்வி ஆண்டில் கல்வி தொலைக்காட்சி மூலமும் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ்அப் மூலமும் பாடங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தமிழ்நாடு முழுவதும் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கல்வி தொலைக்காட்சி மூலமாக இன்று முதல் வகுப்புகள் தொடங்கி உள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வி தொலைக்காட்சி சேவையை நேரில் சென்று தொடங்கி வைத்தார்.