மீண்டும் கரோனா பிடியில் இந்தியா.. பல நாடுகளில் இந்தியா விமான சேவைக்கு தடை !

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை வாட்டி வருகிறது.நாளுக்கு நாள் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .மேலும் மே மாதத்தில் நிலைமை மோசமாகலாம் என்று தெரியப்படுகிறது.

உள்ளூர் விமான சேவை குறைந்த அளவே செயல்பாட்டில் உள்ளது.பிரிட்டன், கனடா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகள் இந்தியாவிலிருந்து பயணம் மேற்கொள்ள தடை விதித்துள்ளன.

மே 3ம் தேதி வரை ஹாங்காங் – இந்தியா இடையிலான விமானங்களுக்கு அந்நாடு தடை விதித்துள்ளது.இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமான சேவைக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கார்கோ விமானங்கள் தவிர்த்து இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பயணிகள் விமான சேவைக்கு அடுத்த 30 நாட்கள் கனடா அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் இருந்து விமான சேவைக்கு தடை விதித்த முதல் நாடு நியூசிலாந்து தான். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.