Corona Virus: விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்பில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது .இந்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் . மேலும் அவர் பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அங்கு கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து ஒழிந்தியாப்பட்டு ஊராட்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.42 கோடியே 69 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் 10,722 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
இதையும் படிங்க: LPG cylinder price : சிலிண்டர் விலை உயர்வை குறித்து கண்ணீர் அஞ்சலி



