LPG cylinder price : சிலிண்டர் விலை உயர்வை குறித்து கண்ணீர் அஞ்சலி

LPG Cylinder
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.134 குறைப்பு

LPG cylinder price :  கொரோனா தொற்று வந்த பிறகு விலைவாசி உயர்வு தொடங்கியது.மேலும் உக்ரைன் ரஷ்யா நாட்டு போருக்கு பிறகு கட்சா எண்ணெய் விலை உயர்வால் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது.

ஏப்ரல் 1 முதல் எல்பிஜி சிலிண்டர் விலை ₹250க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் வெள்ளிக்கிழமை 19 கிலோ காஸ் சிலிண்டர் விலை ₹2,253 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை, சிலிண்டருக்கு ₹346 உயர்த்தப்பட்டது. முன்னதாக மார்ச் 1ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ₹105 உயர்த்தப்பட்டு, மார்ச் 22ஆம் தேதி ₹9 குறைக்கப்பட்டது.

மேலும் புதிய நிதியாண்டின் முதல் நாளில் கூட, உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்கள் டெல்லியில் ₹949.50க்கும், கொல்கத்தாவில் ₹976க்கும், மும்பையில் ₹949.50க்கும், சென்னையில் ₹965.50க்கும் கிடைக்கிறது.மேலும் 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் டெல்லியில் மார்ச் 1ம் தேதி ₹2,012க்கு கிடைத்தது, இது மார்ச் 22ம் தேதி ₹2,003 ஆக குறைக்கப்பட்டது.LPG cylinder price

சிலிண்டர் விலை உயர்வை குறித்து கண்ணீர் அஞ்சலி

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 80 மற்றும் 81வது வார்டு பகுதியை சேர்ந்த மக்கள் நீதி மையத்தினர் கோவையில் பல்வேறு இடங்களில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். மேலும், கடுமையான விலை ஏற்றத்தால் எங்களை விட்டு வெகுதூரம் சென்ற உன்னை நினைத்து ஏங்கும் இல்லத்தரசிகள் என்று இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க : Hyderabad : போதைக்கு அடிமையான மகனுக்கு தாய் கொடுத்த மிளகாய் பொடி தண்டனை

வர்த்தக சிலிண்டர்களுக்கான திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) விலை திங்கள்கிழமை ₹ 250 உயர்த்தப்பட்டது. தேசிய தலைநகரில், 19 கிலோ வணிக சிலிண்டர்களின் விலை ₹ 2,253 என்று தெரிவிக்கப்பட்டுளளது.4.2 கிலோ எடையுள்ள மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை இப்போது டெல்லியில் ₹ 949.50. சென்னையில் இப்போது 19 கிலோ சிலிண்டர் ₹ 2,406 க்கு கிடைக்கும்.

( back to back LPG cylinder price hike )