டி.வி நேரலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட -ஜோ பைடன் !

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியிருக்கும் ஜோ பைடன், ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.இது தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பபட்டது. தடுப்பூசி அனைவருக்கும் வழங்குவதற்கு கையிருப்பில் இருக்கும்போது அதைப் போட்டுக் கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே நானே அதை போட்டுக் கொண்டேன் என்று கூறினார்.