நாளை மறுநாள் கரோனா தடுப்பூசிகாண ஒத்திகை -தமிழ்நாடு !

நாளை மறுநாள் தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.கரோனா தொற்றுக்கான தடுப்பூசியை மக்களுக்கு அடுத்த மாதத்தில் போடுவதற்கான பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் முதல் கட்டமாக 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கரோனா தற்போது கட்டுக்குள் வந்திருப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறினார்,முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, அடிக்கடி சோப்பு போட்டு கையை கழுவுதல் போன்ற அரசு கூறியவற்றை மக்கள் பெரிதும் பின்பற்றியதே இதற்கு முக்கியக் காரணம்.

கரோனா தொற்றை கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்கள், ஆர்டிபிசிஆர் பரிசோதனை, நோய் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் போன்ற பணிகளை தொடர்ந்து மேற்கொண்டோம்.

தடுப்பூசி வந்த பின்னர் முதல் கட்டமாக சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும், 2 ஆம் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், 3 ஆம் கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்டோருக்கும் போடப்படும். அதற்கடுத்து 50 வயதிற்கு குறைவானவர்களில் இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று கூறினார் .