2021 சிபிஎஸ்இ பொதுத் தேர்வு தேதி வெளியீடு !

இன்று டெல்லியில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் குறித்த தேதியை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

அவர் கூறிய தகவல்,10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் 2021ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதிவரை நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜுலை 15ஆம் தேதிக்குள் வெளியாகும் என்றார். முன்னதாக சிபிஎஸ்இ தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படாது என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்திருந்தது.