தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

உலகம் முழுவதும் தற்போது கோவிட்-19 வைரஸின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை அதிவேகமாகப் பரவிவருகிறது. இதனையடுத்து உலக நாடுகள் பல தங்களை கோவிட் வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் கோவிட் வைரஸின் இரண்டாவது அலை தாக்கத்தை அடுத்து கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பு மருந்துகள் அதிவேகமாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இன்று (ஜூன் 21) மாலை 5 மணிவரை ஒரேநாளில் நாடு முழுவதும் 69.25 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இத்தனை டோஸ் தடுப்பு மருந்துகள் இந்திய மக்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாளுக்குநாள் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரித்துவருவது மக்களை பாதுகாக்க உதவுகிறது.18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.