நாடு முழுவதும் வரும் 16-ம் தேதி முதல் தடுப்பூசி

உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்பால் மிகப் பெரிய பாதிப்புகளை எதிர்கொண்டுவருகின்றனர். உலக அளவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 கோடியை நெருங்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், 1,04,31,639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,50,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்து தயார் செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு குறித்தும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்தும் உயர்மட்டக் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்தக்கூட்டத்துக்குப் பிறகு, ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.