திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார் பிரதமர் மோடி..!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.

நாடென்ப நாட்டின் தலை” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். அதாவது, உலகத்தின் பழைமையான மொழி தமிழ் என்பதை நாம் கர்வதோடு கூற வேண்டும், என்றார்.2003 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ஆம் தேதி இந்த பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்யும் இந்தியர்களை கெளரவிப்பதற்காக இந்த நிகழ்வு உருவாக்கப்பட்டது. 1915-ம் ஆண்டு இதே நாளில் தான், மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காக பணியாற்றத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.