கரோனா நிவாரண நிதியாக ரூபாய் 3000 அறிவிப்பு – புதுவை!

இந்தியாவில் கரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அரிசி அட்டைத்தாளர்களுக்கு ரூபாய் 4000 கரோனா நிவாரண நிதியாக வழங்க தமிழக அரசு அறிவித்தது. இதில் இந்த மாதம் 2000 வழங்கப்பட்டது.

புதுவை முதல்வர் ரங்கசாமி ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக அனைத்து ரேஷன்கார்டுக்கும் ரூ.3000 வழங்க அனுமதிக்க வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்.இதன் மூலம் 3,50,000குடும்பங்கள் பயன்பெறும் என அறிவித்தார்.