தடுப்பு ஊசி பரிசோதனைக்கு ஆட்களை தேர்வு செய்ய கூடாது – மத்திய அரசு

கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு ஆட்களை தேர்வு செய்யக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது இதனை தடுக்க பல்வேறு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை அனைத்தும் பரிசோதனை நிலையிலேயே உள்ளன.

இவற்றை கருத்தில் கொண்டு சில நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரித்து விட்டதாக அறிவித்தும், அடுத்தக்கட்ட சோதனைக்கு தயார் எனவும் அறிவித்து வருகிறது.

இந்த சோதனைக்கு மனிதர்களை பயன்படுத்த அந்தந்த நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இவற்றைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது கொரோனா தடுப்பு ஊசி பரிசோதனைக்கு மனிதர்கள் யாரையும் தேர்வு செய்யக்கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.