சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் படிப்படியாக நோய் தொற்று குறைந்து வருவது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 3 நாட்களாக நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளது. மே 27-ந் தேதியன்று 33 ஆயிரத்து 361 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் (28-ந் தேதி) 31 ஆயிரத்து 79 பேரும், நேற்று (29-ந் தேதி) 30 ஆயிரத்து 16 பேரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதன் மூலம் கொரோனா தொற்று தமிழகத்தில் வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த 12-ந் தேதியன்று தினசரி பாதிப்பு 30 ஆயிரம் அளவுக்கு இருந்தது. அதன் பின்னர் கொரோனாவின் தாக்கம் உயர்ந்து கொண்டே சென்றது. அதிகபட்சமாக மே 21-ந் தேதியன்று 36 ஆயிரத்து 184 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து டெல்லியைப் போன்று 40 ஆயிரத்தை கடந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டது.
ஆனால் முழு ஊரடங்கு கொரோனாவின் தாக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 18 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று குறைந்து மீண்டும் 30 ஆயிரம் அளவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



