உள்நாட்டு விமான சேவை கட்டணம் உயர்வு!

national-news-govt-revised-covid-guidelines-for-air-travel-check-new-rules
விமானப் பயணத்திற்கான புதிய விதிகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், உள்நாட்டு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உள்நாட்டு விமான சேவைகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.இது குறித்து, மத்திய விமான போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது, உள்நாட்டு விமான சேவைகளின் குறைந்தபட்ச கட்டணம் 13 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

40 நிமிடங்களுக்கு குறைவான பயண நேரம் உடைய விமான சேவைக்கு 2,300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இனி, அது 2,600 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்படும். இதேபோல் 40 – 60 நிமிட பயண நேரம் உடைய விமான சேவைக்கு 2,900 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அதற்கு 3,300 ரூபாய் வசூலிக்கப்படும்.

உதாரணமாக டெல்லி – மும்பை இடையிலான விமான சேவைக்கு, இனி கூடுதலாக 700 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய கட்டண விதிப்பு ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.