ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரெண்டிங்கில் ஹேஷ்டேக்!!

முதலமைச்சர் ஸ்டாலினின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் முதல்முறையாக #GoBackStalin ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனதைப் பார்த்திருப்போம். ஆனால் முதல் முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்து #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதுவும் இது தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது சமூக வலைத்தளங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹேஷ்டேக் ஒன்று தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடிப்பதும் இது முதல் முறையாகும். ஏற்கனவே இது போன்று ட்ரெண்ட் ஆகியிருந்தாலும் அப்போதெல்லாம் முதல் இடத்தை பிடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.