கடந்த 24 மணி நேரத்தில் 86,961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 86,961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மேலும் 1,130 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டி, 54 லட்சத்து 87 ஆயிரத்து 581 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 10 லட்சத்து 03 ஆயிரத்து 299 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 43 லட்சத்து 96 ஆயிரத்து 399 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 87 ஆயிரத்து 882 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.