கரோனா தொற்று பரவ தொடங்கிய நிலையில் நாளுக்கு நாள் அதன் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மேலும் மாநில அரசு இதை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 7819 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் ஒரே நாளில் மேலும் 2564 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.



