உங்களுக்கு பாத வெடிப்பு இருக்கா இதோ சில டிப்ஸ் !

கால்களில் பாதவெடிப்பு வருவதற்கு காரணம் உடலில் நீர் பற்றாக்குறையும் ஒரு காரணம்.மேலும் அதிக உடல் எடை மற்றும் நீரிழிவு நோயால் பாதவெடிப்பு வரலாம்.

சிலருக்கு ஊட்டச் சத்து குறைபாட்டினாலும் இவை நேருகின்றன. அதிக நேரம் வேலை செய்வதால் கூட வரலாம்.முதலில் காலில் உள்ள அசுத்தத்தை நீக்க வேண்டும்.

அகன்ற பாத்திரத்தில் மித மான வெந்நீர் ஊற்றி எலுமிச்சை சாறு பிழிந்து கல் உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் குறையாமல் உங்கள் உள்ளங்கால்களை அதில் நனையுங்கள்.

தேங்காயெண்ணையுடன் மஞ்சள் சேர்த்து குழைத்து மசாஜ் செய் யுங்கள். பாதங்கள் மிருதுவாவதுடன் வெடிப்பும் தலைதூக்காது.

மாய்சுரைஸர் கண்டிப்பாக கால்களுக்கு பயன்படுத்தவேண்டும்.கற்றாழையின் சாறு அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து உள்ளங் கால் முழுவதும் தடவுங்கள். காய்ந்த பிறகு மிதமான நீரில் சுத்தம் செய்யுங்கள்.