தமிழ் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர்.இவர் வடிவேலுடன் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர்.மேலும் விஜய் டிவி யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கிறார்.
இந்நிலையில் நெல்லை சிவா அவர்கள் நேற்று மாலை 6.30 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார். நெல்லை சிவா திருமணம் செய்து கொள்ளவில்லை.
திருநெல்வேலி மாவட்டம் அவரின் சொந்த ஊரான பணகுடியில் வீட்டிலேயே மாரடைப்பால் காலமாகியுள்ளார் .அவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



