தமிழக அரசின் அதிரடி திட்டம்!

கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக முதல் தவணையாக 2000 ரூபாய் ரேஷன் அட்டைகள் மூலம் வழங்கப்படுகிறது. அதற்கான டோக்கன் அளிக்கும் பணிகள் நேற்று தொடங்கின. மே 15ஆம் தேதி முதல் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளன.

இது மட்டுமல்லாமல் பல்வேறு நல வாரியங்கள் வாயிலாகவும் நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையில் 24 மணி நேரமும் உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு இன்று தொடங்கி வைத்தார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன் அடைவார்கள்.