ஏழு பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

 ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தண்டனை பெற்றுள்ளனர். தண்டனை காலம் முடியும் முன்பே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என 2014 பிப்ரவரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக காங். உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விடுதலை செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மீண்டும் முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

தீர்மானத்தை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தீவிரமாக ஆராய்ந்து தன் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஜன.25ல் அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் ஜனாதிபதி முடிவு செய்வதே உகந்ததாக இருக்கும். இது தொடர்பாக சட்டத்துக்கு உட்பட்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்’ என கூறப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் சட்ட அமைச்சர் ரகுபதி , அரசு தலைமை வக்கீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்